நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரரசருடன் ஐக்கிய அரபு அமீரக அதிபர் சந்திப்பு 

கோலாலம்பூர்: 

மலேசியாவின் மாமன்னர் சுல்தான் இப்ராஹீம், ஐக்கிய அரபு அமீரகத்தின்  அதிபர் ஷேக் முஹம்மது சயீத் அல் நஹ்யானுடன் நேற்று அபுதாபியில் சந்தித்து பேசினார். 

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான மரியாதை உணர்வை அந்த சந்திப்பு பிரதிபலித்தது.. 

அபுதாபியில் உள்ள காசர் அல் பஹர் அரண்மனையில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பு,  மலேசியாவிற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே நீண்டகாலக் கூட்டுறவுகளுக்கான உறுதியான அடித்தளத்தை அமைத்ததாக மாமன்னர் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்களின் நேரடி சந்திப்பில், பொருளாதாரம், முதலீடு, உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாக பேரரசர் கூறினார்.

யுஎஇ தலைவர் வழங்கிய சிறப்பு அழைப்பின் பேரில், நேற்று தொடங்கிய மலேசிய மன்னரின் அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு நடைபெற்றது.

- கிருத்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset