செய்திகள் மலேசியா
மனிதவள அமைச்சராக முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்: டத்தோஸ்ரீ ரமணன்
புத்ராஜெயா:
மனிதவள அமைச்சராக முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
இஸ்தானா நெகாராவில் பதவியேற்பு சடங்குகள் முடிந்தவுடன் மனிதவள அமைச்சராக எனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நான் புத்ராஜெயாவில் உள்ள செத்தியா பெர்டானா வளாகத்திற்குச் சென்றேன்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான அக்கூட்டத்தில் மனிதவள அமைச்சராக நான் பங்கேற்றேன்.
மனிதவள அமைச்சின் கீழ் உள்ள அனைத்து கொள்கைகளும் திட்டங்களும் மடாணி அரசாங்கத்தின் அபிலாஷைகளுக்கு ஏற்ப மக்களுக்கு உண்மையாகவே பலன் அளிப்பதை நான் உறுதிபூண்டுள்ளேன்.
நாளை நான் மனிதவள அமைச்சின்உயர்மட்டத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ளேன்.
பிரதமரின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு அமைச்சரவை உறுப்பினரும் ஒழுக்கத்துடனும் பணிவுடனும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்,
கொள்கை அமலாக்கம் விரைவாகவும், நேர்மையாகவும், தாமதமின்றி எந்தக் காரணமும் கூறப்படாமல் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
மலேசிய மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த நான் சிறந்ததைச் செய்வேன் என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 17, 2025, 5:14 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன்; இந்திய தொழில் துறைகளுக்கு புதிய நம்பிக்கையை தருகிறது: டத்தோ அப்துல் ஹமித்
December 17, 2025, 1:49 pm
பிபிபி கட்சி இன்னமும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியே: டத்தோ லோகபாலா
December 17, 2025, 1:30 pm
உலக அரங்கில் கால் பதித்த பேராக் சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி
December 17, 2025, 12:50 pm
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக யுனேஸ்வரன் பதவியேற்றார்
December 17, 2025, 12:36 pm
அமைச்சரவையில் தமிழில் பேசக்கூடிய முழு அமைச்சரின் தேவையை டத்தோஸ்ரீ ரமணனின் நியமனம் பூர்த்தி செய்துள்ளது: குணராஜ்
December 17, 2025, 12:21 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்
December 17, 2025, 10:46 am
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கை கொலையாக ஏஜிசி வகைப்படுத்தியதை 3 குடும்பங்கள் வரவேற்கின்றன
December 17, 2025, 8:39 am
