நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன்று தலைநகரில் கவிப்பேரரசு வைரமுத்துவின் வள்ளுவர் மறை வைரமுத்து உரை

கோலாலம்பூர்:

கவிப்பேரரசு வைரமுத்துவின் மற்றொரு சிறப்பான படைப்பு.  உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு உரையெழுதியதில் பிறப்பின் பெருங்கடமையொன்று நிறைவேறியதென்று நிறைவெய்துகிறேன் என்கிறார் வைரமுத்து. 

அந்த சிறப்பு மிக்க படைப்பு மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தலைமையில், வைரமுத்து அவர்களின் வருகையோடு இன்று நடைபெறுகிறது.

டிசம்பர் 17, ,2025, புதன்கிழமை மாலை ம இ கா கட்டிடத்தில் அமைந்துள்ள நேதாஜி மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகத் தலைவர் ராஜேந்திரன், மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தலைவர் திருமாவளவன் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

வள்ளுவர் என்ற பெருங்கடலில் நீந்த, இலக்கிய ஆர்வலர்களும், தமிழன்பர்களும் திரண்டு வாருங்கள் என்று ஏற்பாட்டாளர்கள் அழைக்கிறார்கள்.
 
அரங்கத்துக்கு வரும் முதல் 100 பேருக்கு நூல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset