நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகத் துறைக்கான மாற்று அந்நியத் தொழிலாளர் விண்ணப்ப நடவடிக்கைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: பிரிமாஸ்

கோலாலம்பூர்:

உணவகத் துறைக்கான மாற்று (கந்தியான்) அந்நியத் தொழிலாளர்  விண்ணப்ப நடவடிக்கைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.

பிரிமாஸ் எனும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜே. சுரேஷ் கூறினார்.

உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் வேலை வாய்ப்பு ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்களை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதற்காக உள்துறை அமைச்சு, மனிதவள அமைச்சு, உள்நாட்டு வர்த்தக வாழ்க்கைச் செலவின அமைச்சுக்கு பிரிமாஸ் நன்றி தெரிவித்து கொள்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய மாற்று அந்நியத் தொழிலாளர் வேலை வாய்ப்பு ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 31வரை திறந்திருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இருப்பினும் விரிவான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் அக்டோபரில் மட்டுமே வெளியிடப்பட்டன.

இதனால் செயல்முறையை முடிக்க ஆபரேட்டர்களுக்கு குறைந்த நேரம் மட்டுமே கிடைத்தது.

இதன் விளைவாக, தேவையான அனைத்து ஆவணங்களையும் தொகுக்க போதுமான நேரம் இல்லை.

மேலும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பல உணவக ஆபரேட்டர்கள் இன்னும் நேர்காணல் தேதிகளைப் பெறவில்லை.

இதைக் கருத்தில் கொண்டு பிரிமாஸ் தற்போதைய மாற்று அந்நியத் தொழிலாளர் விண்ணப்ப செயல்முறையை குறைந்தபட்சம் ஆறு  மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.
இதனால் தேவையான அனைத்து நடைமுறைகளையும் முடிக்க ஆபரேட்டர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும்.

உணவகத் துறையின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய வெளிநாட்டுத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான அனுமதிகளை மீண்டும் திறக்க பிரிமாஸ் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

இந்த விஷயம் தீவிரமாகக் கவனிக்கப்படாவிட்டால், அது உணவுத் துறையிலும் பொருளாதாரத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் மாற்று தொழிலாளர்களை மட்டுமே நம்பியிருப்பது போதுமானதாக இருக்காது.

ஏனெனில் தற்போதுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் தங்கள் மூன்று ஆண்டு ஒப்பந்தங்களை முடித்தவுடன் அடுத்த ஆண்டு தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, தொழில்துறையின் நிலைத்தன்மையையும் பரந்த பொருளாதாரத்தையும் உறுதி செய்வதற்கு புதிய வெளிநாட்டுத் தொழிலாளர்களின் ஒப்புதலை முன்னுரிமையாகக் கருத வேண்டும் என்று டத்தோ சுரேஷ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset