நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கை கொலையாக ஏஜிசி வகைப்படுத்தியதை 3 குடும்பங்கள் வரவேற்கின்றன

கோலாலம்பூர்:

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கை கொலையாக ஏஜிசி வகைப்படுத்தியதை மரணமடைந்தவர்களின் 3 குடும்பங்கள் வரவேற்கின்றன.

மலாக்காவின் டுரியான் துங்காலில் போலிசாரால் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கை கொலையாக மறுவகைப்படுத்த சட்டத் துறை தலைவர் (ஏஜிசி) முடிவை எடுத்துள்ளார்.

ஏஜிசியின் இந்த முடிவை மூன்று நபர்களின் குடும்பங்கள் வரவேற்கின்றன.

அவர்களின் வழக்கறிஞர்களான ராஜேஷ் நாகராஜன், சச்ப்ரீத்ராஜ் சிங் ஆகியோர் இதனை கூறினர்.

இந்த வழக்கை கொலையாக விசாரிக்க ஆரம்பத்திலிருந்தே ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

இதில் சம்பவத்தின் ஆடியோ, நோயியல் நிபுணர் எங்களுக்கு வழங்கிய கண்டுபிடிப்புகள், பல புகைப்படங்கள் அடங்கும்.

அதிகாரிகள் இறுதியாக அதை கொலை என்று சரியாக வகைப்படுத்தியதால் குடும்பத்தினர் நிம்மதியடைந்துள்ளனர்.

அதுதான் சரியான செயல் என்று அவர்கள் கூறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset