நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிபிபி கட்சி இன்னமும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியே: டத்தோ லோகபாலா

ஈப்போ:

பிபிபி கட்சி இன்னமும் தேசிய முன்னணியில் உறுப்பியம் பெற்ற கட்சியாக உள்ளது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மோகன் திட்டவட்டமாக கூறினார்.

அக் கட்சியில் ஏற்பட்ட உட்பூசல் காரணத்தால்தான் தேசிய முன்னணியில் இருந்து விலகியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதற்காக  பிபிபி கட்சி தேசிய முன்னணியில் இல்லை என்று பொருள்படாது. தற்பொழுது பிபிபி கட்சியில் எந்த உட்பூசல் இல்லை. களையெடுக்கப்பட வேண்டியவர்களை அப்புறப்படுத்திவிட்டோம்.

மேலும் 320,000 உறுப்பினர்களைக்கொண்டு சிறப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வரும் பிபிபி கட்சி விரைவில் தேசிய முன்னணியில் மீண்டும் இணைந்து  செயல்படும்.

இன்னும்  ஒரிரு மாதங்களில் தேசிய முன்னணியின்  தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி அதற்கான அறிவிப்யை செய்வார் என்று தாம் எதிர்பார்ப்பதாக  அவர் கூறினார்.

ஈப்போவில் பிபிபி கட்சியின் மாநில அலுவலகத்தை திறந்து வைத்தப் பின்னர் டத்தோ லோகபாலா இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கட்சியில் மேலும் அதிகமான உறுப்பினர்கள் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேராவில் மாநில பிபிபி அலுவலகம் திறக்கட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் அதிக சேவை வழங்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset