நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சரவையில் தமிழில் பேசக்கூடிய முழு அமைச்சரின் தேவையை டத்தோஸ்ரீ ரமணனின் நியமனம் பூர்த்தி செய்துள்ளது: குணராஜ்

கோலாலம்பூர்:

அமைச்சரவையில் தமிழில் பேசக்கூடிய முழு அமைச்சரின் தேவையை டத்தோஸ்ரீ ரமணனின் நியமனம் பூர்த்தி செய்துள்ளது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் புதிய அமைச்சரவையில் மனிதவள அமைச்சராக  டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனும், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சராக யுனேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வேளையில் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல், உள்ளடக்கிய வளர்ச்சி, மக்களின் நல்வாழ்வை முன்னெடுப்பதில் இந்த இரண்டு தலைவர்களின் திறன்கள், நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றில் பிரதமரின் முழு நம்பிக்கையை இந்த நியமனம் தெளிவாக பிரதிபலிக்கிறது.

இந்திய சமூகத்தின் கவலைகள், கோரிக்கைகளை, குறிப்பாக அமைச்சரவையில் தமிழில் பேசக்கூடிய ஒரு இந்திய அமைச்சரின் தேவையை பூர்த்தி செய்த பிரதமருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நியமனம் இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் குரல், அபிலாஷைகளுக்கு ஒரு முக்கியமான அங்கீகாரமாகும்.

இந்திய சமூகம் மடானி அரசாங்கத்துடனும் பிரதமருடனும் நெருக்கமாகப் பணியாற்றவும், தற்போதுள்ள தலைமையை ஆதரிக்கவும், சிறந்த எதிர்காலத்திற்காக சமூகத்தின் கோரிக்கைகள், தேவைகளை தெரிவிக்க இப்போது நேரம் வந்து விட்டது.

டத்தோஸ்ரீ ரமணனுக்கு கொடுக்கப்பட்ட இந்த மாபெரும் நம்பிக்கை முழு அர்ப்பணிப்புடனுன் நிறைவேற்றப்படும் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவதற்கும், பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தின் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும்.

மேலும் நீதியான, முற்போக்கான ஒன்றுபட்ட மலேசியாவைக் கட்டியெழுப்புவதற்கும் முயற்சிகளில் ஒன்றாகும்.

நாடு, மக்களின் நலனுக்காக நம்பிக்கையை நிறைவேற்றுவதில் வாழ்த்துக்கள் என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset