நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலக அரங்கில் கால் பதித்த பேராக் சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 

சிம்மோர்:

அனைத்துலக  நிலையில் சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியை மிளிர வைத்த மாணவர்கள் பள்ளியின் நேர்த்தி நிறை விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

1946 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட  தோட்டப்புற பள்ளியான அதில் 78 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

இதில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் பி40 பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களில் 30 மாணவர்கள் ஆறு அறிவியல் புத்தாக்க கண்டு பிடிப்புகளை  உருவாக்கி அனைத்துலக போட்டியில் பங்கேற்று வெற்றிப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தோட்டப் புற பள்ளியாக இருந்தாலும் கல்வி ஆற்றலில்  சலைத்தவர்கள் அல்ல என்பதை நிருப்பித்துள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

வசதி குறைந்த மாணவர்கள் அதிகமானோர் தோட்டப் புற பள்ளியில் காணலாம்.

அதே வேளையில் அப் பள்ளியிலும் பல முத்தான மாணவர்கள் மற்றும் திறமையான மாணவர்கள் தோட்டப் புற பள்ளியிலும் உள்ளனர் என்பதை சிம்மோர் தோட்டப் புற பள்ளி எடுத்துக்காட்டு என்கிறார் அபள்ளியின் தலைமையாசிரியர் நளினா ராமகிருஷ்ணன்.

இநத நிகழ்வில் சிறப்பு வருகை பிரிந்த வர்த்தக பிரமுகர் எஸ். வாசு ஆற்றிய உரையில் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சோடையானவர்கள் அல்ல என்பதை நிருப்பித்துள்ளது சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி.

இப்பள்ளி மட்டும் அல்ல பல தமிழ்ப்பள்ளிகள் இதுபோன்று பல சாதனைகள் படைத்து வருவதை காண முடிகிறது.

ஆகவே தமிழ்ப்பள்ளிகளின் எதிர்கால நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்களின் பிள்ளைளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

முன்னதாக பேசிய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் க. டினேஷ்குமார், தமிழ்ப்பள்ளி மாணவர்களின். 

வளர்ச்சிக்கு அரும்பாடுப்பட்டு வரும் தமிழாசிரியர்களின் சேவையை பாராட்டினார்.

தமிழ்ப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பலர் பல உயர் தொழில் துறையில் சேவையாற்றி வருவதை எடுத்துரைத்தார்.

சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற நேர்த்தி நிறை விழாவில் மாணவர்கள் படைத்த ஆடல்,  பாடல், நாடகம் ஆகியவைகள் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset