நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்

கோலாலம்பூர்:

மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புதிய அமைச்சரவையை நேற்று அறிவித்தார்.

இப்புதிய அமைச்சரவையில் 7 பேர் அமைச்சர்களாகவும் 8 துணையமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

மடானி அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடர்ந்து, மொத்தம் ஏழு அமைச்சர்களும் எட்டு துணை அமைச்சர்களும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் முன் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

நியமன ஆவணங்களை வழங்கும் விழா, பதவிப் பிரமாணம் ஆகியவை இன்று காலை இங்குள்ள இஸ்தானா நெகாராவில் நடைபெற்றது.

இதில் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று மனிதவள அமைச்சராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து டத்தோஸ்ரீ ரமணன் மனிதவள அமைச்சராக பணியை தொடங்கவுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset