நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வியாழன் நள்ளிரவு வரை கடும் மழை: மெட் மலேசியா எச்சரிக்கை

கோலாலம்பூர்:

திரெங்கானு, பகாங், ஜோகூர் பகுதிகளில் இன்று முதல் வியாழன் நள்ளிரவு வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரெங்கானு, ஜெரான்ட், மாறன், குவாந்தன், பெக்கான், பஹாங்கில் ரோம்பின், ஜோகூரில் உள்ள செகாமட், குளுவாங், மெர்சிங், கோத்த திங்கி ஆகிய இடங்களில் கடுமையான மழை எச்சரிக்கை விடப்பட்டதாக மெட்மலேசியாவின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் முஹம்மத் ஹிஷாம் முஹம்மத் அனிப் தெரிவித்தார்.

மேலும், தொடர்ச்சியான மழை எச்சரிக்கை கிளந்தான் மாநிலம் முழுவதும் விடப்பட்டுள்ளது. 

பஹாங்கில், இந்த எச்சரிக்கை கேமரூன் ஹைலேண்ட்ஸ், லிபிஸ், ராப், பென்டாங், டெமர்லோ, பெராவுக்கு விடுக்கப்பட்டுள்ளது. 

ஜோகூரில், தங்காக், மூவார், பத்து பஹாட், பொண்தியன், குலாய், ஜோகூர் பாரு மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் அதிகாரப்பூர்வ MetMalaysia வலைத்தளம், myCuaca மொபைல் செயலி, அதிகாரப்பூர்வ சமூக ஊடக சேனல்கள் அல்லது 1-300-22-1638 என்ற மெட்மலேசியா ஹாட்லைனை அழைப்பதன் மூலம் புதுப்பிக்கப்பட்ட வானிலை தகவல்களை பெறலாம். 

- பெர்னாமா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset