செய்திகள் இந்தியா
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
ஆக்ரா:
உத்தரப் பிரதேசத்தில் உள்ள தில்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அடர்ந்த மூடுபனி காரணமாக நேரிட்ட பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்த 8 பேருந்துகள் மற்றும் மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதியதில் ஒரு பேருந்தில் தீப்பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பேருந்துகளுக்கும் தீ பரவியதால் என்ன செய்வதென்று அறியாத வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்துப் பயணிகள் தீயில் காயமடைந்தனர்.
முதல்கட்டத் தகவலின் அடிப்படையில், யமுனா விரைவுச் சாலையின் ஆக்ரா-நொய்டா சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல் கண்காணிப்பாளர் ஷ்லோக் குமார் தெரிவித்தார்.
அடர்ந்த மூடுபனி காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதனால், ஒரு பெரிய தீ விபத்து நேரிட்டு, பேருந்துகள் மற்றும் கார்கள் சில நிமிடங்களில் எரிந்தன.
தீ விபத்து நேரிட்டதும் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் 4 பேர் தீ விபத்தில் பலியாகியுள்ளனர். 150 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மதுராவிலும் அண்டை மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளுக்கு சுமார் 25 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பலரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 10:35 am
இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்பம்: தெலங்கானா வெயிலில் 16 பேர் பலி
May 22, 2026, 11:06 pm
டில்லி விமான நிலையத்தில் முழு அவசரநிலையை அறிவித்த ஏர் இந்தியா
May 21, 2026, 5:38 pm
மோடியை பாம்பாட்டியாக காட்டிய நார்வே நாளிதழின் கேலிச்சித்திரம்
May 20, 2026, 11:48 am
மோடியிடம் கேள்வி கேட்ட நார்வே செய்தியாளர் இன்ஸ்டா, முகநூல் பக்கங்கள் முடக்கம்
May 19, 2026, 8:19 pm
