நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிழக்கு கடற்கரை மாநிலங்கள், ஜொகூரில் வியாழக்கிழமை வரை கனமழை பெய்யும்

கோலாலம்பூர்:

கிழக்கு கடற்கரை மாநிலங்கள், ஜொகூரில் வியாழக்கிழமை வரை
கடுமையான கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) இதனை ஓர் அறிக்கையில் கூறியது.

வரும் வியாழக்கிழமை வரை பல மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிளந்தான், திரெங்கானு முழுவதும் கடுமையான தீவிரம் கொண்ட தொடர்ச்சியான கனமழை பெய்யும்.

கூடுதலாக குவாந்தான், பெக்கான், ரொம்பின் உட்பட பகாங்கில் உள்ள பல பகுதிகளும், மெர்சிங்கில் உள்ள ஜொகூர்,  கோத்தா திங்கியும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதே போன்று நாட்டின் பல பகுதிகளிலும் கனமழை பெய்யும் என மெட் மலேசியா கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset