நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழந்தைகள், குடும்பங்களுக்கான பாதுகாப்பான இணையம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது: எம்சிஎம்சி

சைபர்ஜெயா:

குழந்தைகள், குடும்பங்களுக்கான பாதுகாப்பான இணையம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது என எம்சிஎம்சி அறிவித்துள்ளது.

எம்சிஎம்சி 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு, பல்லூடக சட்டத்தின் (ஏகேஎம் 1998) பிரிவு 46ஏ இன் கீழ், பெரிய அளவிலான இணைய செய்தி, சமூக ஊடக சேவை வழங்குநர்கள் மீது, குறிப்பாக குழந்தைகள், குடும்பங்களுக்கு இணைய பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக 2026 ஜனவரி 1 முதல்  டீமிங் பிரிவை செயல்படுத்தும்.

மலேசியாவில் எட்டு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களைக் கொண்ட சேவை வழங்குநர்களுக்கு இந்த விதி பொருந்தும்.

அவர்கள் முறையான பதிவு செயல்முறையை மேற்கொள்ளாமல், பயன்பாட்டு சேவை வழங்குநர் வகுப்பு (ஏஎஸ்பி (சி)) உரிமத்தை வைத்திருப்பவர்களாக தானாகவே பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்படுவார்கள்.

வாட்ஸ்அப், டெலிகிராம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டோக், யூ டியூப் உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் தளங்களை செயல்படுத்துவது இதில் அடங்கும்.

இந்த நடவடிக்கை அனைத்து பெரிய அளவிலான தளங்களும் மலேசியாவின் சட்ட, ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் ஒழுங்கான, நிலையான, பயனுள்ள முறையில் செயல்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

டீமிங் விதியை செயல்படுத்துவது, தள பொறுப்புணர்வை வலுப்படுத்துதல், மலேசிய சட்டங்களுடன் இணங்குவதை வலுப்படுத்தும்.

குறிப்பாக வெளிநாட்டிலிருந்து செயல்படும் சேவை வழங்குநர்களுக்கு ஒழுங்குமுறை இடைவெளிகளை மூடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று எம்சிஎம்சி கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset