நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்எம் முஹம்மத் இத்ரிஸின் போராட்டங்கள் அனைவருக்குமான படிப்பினையாகும்: பிரதமர் அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர்:

ஹாஜி எஸ் எம் முஹம்மத் இத்ரிஸின் போராட்டங்கள் அனைவருக்குமான படிப்பினையாகும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் உட்பட பல அமைப்புகளின் முன்னோடித் தலைவராக எஸ்எம் முஹம்மத் இட்ரிஸ் விளங்கி பல பணிகளை இந்த சமூகத்திற்கு செய்தார்.

பயனீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முதல் மரங்கள், இயற்கை வளத்தை பாதுகாக்க எஸ்எம் முஹம்மத் இத்ரிஸ் தன் வாழ்நாள் முழுவதும் போராடி உள்ளார்.

அனைத்து பிரச்சினைகளிலும் அவரின் குரல் மிகவும் வலுவாக இருக்கும்.

ஒரு சாதாரண நிலையில் இருந்து கொண்டு அவர் அனைத்து பிரச்சினைகளுக்கும் யாருக்கும் அஞ்சாமல் அவர் குரல் கொடுத்து வந்துள்ளார்.

அவர் முன்னெடுத்த போராட்டங்களின் வாயிலாக எஸ்எம் முஹம்மத் இத்ரிஸ் மதிக்கத்தக்க மாமனிதராக உள்ளார்.

எஸ்எம் முஹம்மத் இத்ரிஸ் இன்று நம்முடன் இல்லை. இருந்தாலும் அவரின் போராட்டங்கள் அனைவருக்குமான படிப்பினையாகும்.

அரசியல் தலைவர்கள் முதல் சமூக போராட்டவாதிகள் என அனைவரும் அவரின் போராட்டங்களை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்ற வேண்டும்.

பெட்டாலிங் ஜெயா ஐஏஐஎஸ்சில் நடைபெற்ற எஸ்எம் முஹம்மத் இத்ரிஸின் நினைவு புத்தகத்தை வெளியிட்ட பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

மக்களவை சபாநாயகர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி, கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மொஹைதின் அப்துல் காதிர், இஸ்லாமிய கல்வி அறவாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால், யாயாசன் உபைதி அற வாரியத் தலைவர் டத்தோ ஹிஷாமுத்தீன், சேகு அஸ்மி, பேங்க் ராயாட் வங்கியின் இயக்குனர் டத்தோ ஸ்ரீ வசிஹர் ஹசன், தி அதர் பிரஸ் இயக்குனர் ஹாஜி கோயா குட்டி, சிங்கப்பூர் ஆடிட்டர் ஃபெரோஸ் கான், அமானா உச்ச மன்ற உறுப்பினர் ஹாஜி பஷீர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset