நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிள்ளைகளுக்கான இணைய பாதுகாப்பு சட்டம் கால தாமதமின்றி அமல்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

பிள்ளைகளுக்கான இணைய பாதுகாப்பு சட்டம் கால தாமதமின்றி அமல்படுத்தப்பட வேண்டும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்.

சமீபத்தில் அதிகாரிகள் அறிவித்த 880,000 பாலியல் கோப்புகள் அதிர்ச்சியூட்டும் தகவலாக உள்ளன.
இது தொடர்பாக  31 கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆக 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் திட்டங்கள், இணைய பாதுகாப்புச் சட்டம் 2025 அமலாக்கத்துடன், மலேசியாவின் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கின்றன.

இந்த நடவடிக்கை மலேசியாவை தடுப்பு அணுகுமுறைக்கு மாற்றுகிறது.

இதன் அடிப்படையில் பிள்ளைகளுக்கான இணைய பாதுகாப்பு சட்டம் எந்தவொரு கால தாமதமின்றி அமல்படுத்தப்பட வேண்டும்.

இது பிள்ளைகள் பாதுகாப்பான முறையில் இணையத்தை பயன்படுத்த வழிவகுக்கும்.

குறிப்பாக பிள்ளைகள் இணையத்தை பயன்படுத்துவது குறித்து பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தாது என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset