நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்கிறது; இடமாற்றப் பேச்சுவார்த்தைகள் தொடரும்: அமிரூடின் ஷாரி

கோம்பாக்:

பத்துகேவ்ஸ் இந்தியர் செட்டில்மெண்ட் குடியிருப்பு பகுதியின் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்கிறது.

இதற்கான இடமாற்றப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

பத்துகேவ்ஸ் இந்தியர்களின் குடியேற்றத்தை உள்ளடக்கிய மறுசீரமைப்புத் திட்டம் தொடரும்.

திட்டமிடல், கட்டுமானம், மக்கள் இடமாற்றம் குறித்து மேலும் விவாதங்கள் நடைபெறும்.

சாலை கட்டுமானம் தொடர்பான திட்டம் அடுத்த ஆண்டு தைப்பூச கொண்டாட்டத்திற்குப் பிறகு தொடங்கும்.

எழும் பிரச்சினைகளைத் தீர்க்க அடுத்த மாதம் மேலும் விவாதங்கள் தொடரும் என்றும் அவர் அவர் அறிவித்தார்.

இந்த தொழில்நுட்ப சிக்கல்களை அடுத்த மாதம் தீர்க்க முயற்சிப்போம்.

கோம்பாக் மாவட்ட,  நில அலுவலக வளாகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset