நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரத்தக்களரியான போண்டி கடற்கரை தாக்குதலுக்கு தந்தையும் மகனும் மூளையாக செயல்பட்டனர்: ஆஸ்திரேலிய போலிஸ்

சிட்னி:

இரத்தக்களரியான போண்டி கடற்கரை தாக்குதலுக்கு தந்தையும் மகனும் மூளையாக செயல்பட்டனர்.

ஆஸ்திரேலிய போலிஸ்படையினர் ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தனர்.

சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ஒரு குழந்தை,  இரண்டு போலிஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு ஆணும் அவரது மகனும் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஹனுக்காவின் முதல் இரவில் நடந்த சம்பவத்தை யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட யூத எதிர்ப்புத் தாக்குதல் என்றும்  அதிகாரிகள் விவரித்தனர்.

50 வயதான தாக்குதல் நடத்தியவர் அதிகாரிகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதே நேரத்தில் அவரது 24 வயது மகன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

சந்தேக நபர் ஆறு உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும், அவை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுவதாகவும் போலிசார் தெரிவித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset