நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அப்பர் தமிழ்ப்பள்ளியின் மேம்பாடு, வளர்ச்சிக்கு துணை நிற்பேன்: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

அப்பர் தமிழ்ப்பள்ளியின் மேம்பாடு, வளர்ச்சிக்கு தொடர்ந்து துணை நிற்பேன்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலரும் மஹிமா தலைவருமான டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

தலைநகரில் உள்ள அப்பர் தமிழ்ப் பள்ளியின்  திறன்மிகு மாணவர் உருவாக்க விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தலைமையேற்று டத்தோ சிவக்குமார் உரையாற்றினார். அவர் கூறியதாவது,

அப்பர் தமிழ்ப்பள்ளி தொடக்கத்தில் இடைநிலைப் பள்ளியாக விளங்கியது. கால ஓட்டத்தில் இந்தப் பள்ளி தொடக்கப் பள்ளியாக மாறியது.

இப்பள்ளி தேவஸ்தானத்தின் பராமரிப்பில் செயல்பட்டு வருவது வரலாறாகும்.

தற்போது இந்தப் பள்ளி மாணவர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும். மேலும் தேவஸ்தானத்தின் சார்பில் இந்த பள்ளிக்கு வழங்கப்பட்ட பேருந்து தற்பொழுது பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக பள்ளியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்தப் பேருந்து விரைவில் இயங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக அப்பர் தமிழ்ப்பள்ளியின் மேம்பாடு, வளர்ச்சிக்கு துணை நிற்பேன் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset