நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கே.எல். ஐ. ஏ விமான நிலையத்தில் 19 மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை

கோலாலம்பூர்:

KLIA சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் எல்லை கட்டுப்பாட்டு, பாதுகாப்பு முகமைக்கு உட்பட்ட 19 அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் நேர்மையின் அடிப்படையிலும் பணிச்செயல் நடைமுறைகளை மீறிய பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளனர். 

எல்லை கட்டுப்பாட்டு பாதுகாப்பு முகமை, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையப் பிரிவு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒழுக்கக் குழு கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

எல்லை கட்டுப்பாட்டு பாதுகாப்பு முகமை திங்கட்கிழமை வெளியிடப்பட்ட  அறிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒழுக்கக் குழு கூட்ட முடிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் பணிக்கு வராதது உள்ளிட்ட குற்றங்களும் அதோடு நாட்டிற்குள் நுழைவு-வெளியேற்றம் தொடர்பான பாதுகாப்பு முத்திரை பயன்படுத்தும் நடைமுறைகளை மீறிய குற்றங்களிலும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர்.

“அவர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடப்பட்டதோடு ஊதிய உயர்வு இடைநிறுத்திற்கும் அதனுடன் ஊதியக் குறைப்பு போன்ற ஒழுக்க நடவடிக்கைகளுக்கும் அவர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், அதிகாரிகளின் நேர்மை தொடர்பான பல்வேறு குற்றங்களை விசாரிக்க மேலும் 43 ஒழுக்க விசாரணை வழக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக எல்லை கட்டுப்பாட்டு பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

இந்த குற்றங்களில், தரநிலை செயல்முறை வழிகாட்டுதல்களை மீறுதல், பணிச்செயல் விதிமுறைகளை பின்பற்றாதவை, நாட்டிற்குள் நுழைவு-வெளியேற்றம் தொடர்பான பாதுகாப்பு முத்திரை தவறான பயன்படுத்துதல், எதிர் அமைப்பின் கட்டுப்பாடு, எல்லை பாதுகாப்பினது நம்பகத்தன்மையை பாதிக்கக்கூடிய நடைமுறைகள் ஆகியவை அடங்குகின்றன.

எந்தவொரு தவறான நடத்தை அல்லது நேர்மை மீறலுக்கும் தாம் ஒருபோதும் தளர்வு காட்டமாட்டோம் என்று எல்லை கட்டுப்பாட்டு, பாதுகாப்பு முகமை வலியுறுத்தியுள்ளது.

- கிருத்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset