நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இணைவதற்கு UEC சான்றிதழ் அவசியம் இல்லை: அஷ்ரஃப் வாஜ்தி

கோலாலம்பூர்:

மஜ்லிஸ் அமானா ராக்யாட் (MARA) மன்றத்தின் தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ரஃப் வாஜ்தி துசுகி, ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் (UEC) சீனா நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில்  கட்டாய நிபந்தனை அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சீனாவின் சிங்க்ஹுவா பல்கலைக்கழகம், பேக்கிங் பல்கலைக்கழகம், ஷாங்காய் ஜியாவோ தொங் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின் மூலம் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக அஷ்ரஃப் வாஜ்தி தெரிவித்தார்.

“சிங்க்ஹுவா, பேக்கிங், ஷாங்காய் ஜியாவோ தொங் பல்கலைக்கழகங்கள் போன்ற சீனாவின் முன்னணி பல்கலைக்கழகங்களுடன் நான் நடத்திய கலந்துரையாடல்களில், ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் சேர்க்கை நிபந்தனையாக இல்லை”.

“மஜ்லிஸ் அமானா ராக்யாட் (MARA), தற்போது மலேசிய கல்விச் சான்றிதழ் தேர்வில் சிறந்த முடிவுகள் பெற்ற மாணவர்களை அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது,” என அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் விளக்கமளித்த அஷ்ரஃப் வஜ்தி, “மஜ்லிஸ்  MARAவின் மூலம் இளநிலை அறிவியல் கல்லூரிகளில் மலாய் மொழிக்கும், ஆங்கில மொழிக்கும் அடுத்ததாக மூன்றாவது மொழி தேர்ச்சியை ஒரு அவசியமாக அறிமுகப்படுத்தியுள்ளதாக அஷ்ரஃப் கூறினார்.

மூன்றாவது மொழிகளாக அரபு, மாண்டரின், பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மற்றும் கொரிய மொழிகள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் மலேசிய கல்விச் சான்றிதழ் தேர்வில் சிறந்த முடிவுகள் பெற்ற மாணவர்கள், இந்த மொழிகளில் ஒன்றில் நன்கு தேர்ச்சி பெற்றால், உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் மேல்கல்வி தொடரலாம். மேலும், அவர்களுக்கு அரசுத் பயிற்சி உதவித்தொகைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதையும் அவர் கருத்துரைத்துள்ளார் .

“மலாய் மொழி, ஆங்கில மொழி, மாண்டரின், அரபு, ஜப்பானிய, கொரிய, ஜெர்மன், பிரெஞ்சு அல்லது ஸ்பானிய மொழிகளில் ஒன்றைத் திறம்படக் கையாளக்கூடிய தொழில்நுட்ப நிபுணர்களையும் வல்லுநர்களையும் கொண்ட தலைமுறையை உருவாக்குவதே எங்களின் இலக்காகும்,” என்று அஷ்ரஃப் வாஜ்தி கூறினார்.

“இறைவன் அருளால், இந்த முயற்சி எதிர்காலத் தலைமுறை பல மொழி அறிவின் சிறப்புடன் உலகளவில் மேலும் உயர்வடைய வழிவகுக்கும்,” என அவர் கூறினார்.

- கிருத்திகா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset