நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அநாகரீகப் பேச்சு; ஜாஹித் ஹமிடியின் தன்மையை பிரதிபலிக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடியின் அநாகரீகப் பேச்சு அவரின் தன்மையை பிரதிபலிக்கிறது.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

ஐபிஎப் கட்சி மாநாட்டில் துணைப் பிரதமருமான ஜாஹித் ஹமிடியின் பேச்சை நான் வரவேற்கிறேன்.

குறிப்பாக தேசிய முன்னணியில் இருந்து வெளியேறினால் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.

உண்மைதான் தேசிய முன்னணியில் 14 கட்சிகள் இருந்தன. 

இப்போது எத்தனை கட்சிகள் உள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆக ஒரு முறை வெளியேறினால் மீண்டும் வர முடியாது என்பது அனைவருக்குமே தெரியும்.

அதே வேளையில் அம்மாநாட்டில் ஜாஹித் ஹமிடி அநாகரீகமாகப் பேசினார் என்றும் கூறப்படுகிறது.

அதை பற்றி கருத்துக் கூற வேண்டும் நான் விரும்பவில்லை.

ஆனால் அது ஜாஹித் ஹமிடியின் தன்மையை குறிக்கிறது என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset