நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மற்ற இனத்தவர்கள் ஆக்கிரமிக்கும் தொழில் துறைகளில் இந்தியர்கள் தடம் பதிப்பது பாராட்டுக்குரியது: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

மற்ற இனத்தவர்கள் ஆக்கிரமிக்கும் தொழில் துறைகளில் இந்தியர்கள் தடம் பதிப்பது பாராட்டுக்குரியது.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

கண்ணா சிகை அலங்கார நிலையத்தின் இரண்டாவது கிளையை அதிகாரப்பூர்வமாகத் தலைமை ஏற்று திறந்து வைத்ததில் மகிழ்ச்சி. 

நம்மவர்கள் தொழில் ரீதியாக வளர்ந்து வருவதைப் பார்க்க மகிழ்சியாக இருக்கிறது.

குறிப்பாக சிகை அலங்காரம் உட்பட அது சார்ந்த துறைகளில் மற்ற இனத்தவர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஆனால் அத் துறைகளில் இந்தியர்கள் இப்போது கால்பதித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும்  தொடர்ச்சியான வணிக மையங்களும், அடுக்கடுக்கான கிளைகளும் வணிக ரீதியாக நாம் முன்னேறி வருவதைப் புலப்படுத்துகிறது. 

இவ்வேளையில் கண்ணா சிகை அலங்கார நிலையத்தின் உரிமையாளர் கண்ணாவுக்கு எனது பாராட்டுகள்.

'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்'

கைத்தொழில் கற்றுக் கொண்டால் எந்த சூழலிலும் கவலையின்றி வாழலாம். 

தன்னம்பிக்கையுடன் பொருளாதாரப் பாதுகாப்பும் கிடைக்கும். வாழ்வோம், வெல்வோம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset