நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஐபிஎப் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்: லோகநாதன்

கோலாலம்பூர்:

வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஐபிஎப் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ லோகநாதன் இதனை வலியுறுத்தினார்.

கடந்த பொதுத் தேர்தலில் பினாங்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஐபிஎப் கட்சிக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் அடுத்த பொதுத் தேர்தலிலும் போட்டியிட ஐபிஎப் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

கடந்த பொதுத் தேர்தலில் ஒரு நாடாளுமன்ற தொகுதி. அடுத்த தேர்தலில் மூன்று தொகுதிகள் வழங்கினால் கூட ஏற்றுக் கொள்வோம்.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி எங்களின் கோரிக்கையை ஆராய வேண்டும்.

இன்று காலையில் நடைபெற்ற ஐபிஎப் கட்சியின் 33ஆவது தேசிய பேராளர் மாநாட்டில் கொள்கையுரை ஆற்றிபோது அவர் இந்த கோரிக்கையை முன் வைத்தார்.

தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset