நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த எஸ்.எம்.முஹம்மது இத்ரிஸ் வாழ்க்கை வரலாறு புத்கத்தை மலேசியப் பிரதமர் நாளை வெளியீடு செய்கிறார்

கோலாலம்பூர்:

மலைகளை நகர்த்தக்கூடிய மனிதர் என்ற தலைப்பிலான ஹாஜி எஸ் எம் முஹம்மது இத்ரிஸின் சமூக செயல்பாடு பற்றிய பிரதிபலிப்பு வாழ்க்கை வரலாறு புத்தகத்தை மலேசிய பிரதமர்  டத்தோ அன்வார் இப்ராஹிம் நாளை கோலாலும்பூரில் வெளியீடு செய்கின்றார்.

பினாங்கு பயனீட்டாளர்  சங்கம், பூவுலகின் நண்பர்கள் இயக்கம், சர்வதேச மேம்பாட்டு இஸ்லாமிய ஆய்வு நிறுவனத்துடன்  இணைந்து, “ இட்ரிஸை நினைவுகூர்தல்: குடிமைச் செயல்பாட்டின் உணர்வைப் புதுப்பித்தல்” என்ற கருப்பொருளில்  இந்த புத்தக வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

இந்த நிகழ்வு மலேசியாவின் சிவில் சமூகத்தில் ஒரு உயர்ந்த நபரான மறைந்த எஸ்.எம். முஹம்மது இத்ரிஸின் அசாதாரண வாழ்க்கை, மரபு, நீடித்த உணர்வைக் கொண்டாடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதிப் போராளியாக தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மூலம், கொள்கை ரீதியான, கூட்டு நடவடிக்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஏற்படுத்தக்கூடிய ஆழமான தாக்கத்தை அவர் நிரூபித்தார்.

270 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியீடு செய்கிறார்.

 "மலைகளை நகர்த்தக்கூடிய மனிதன்: எஸ்.எம். முகமது இத்ரிஸின் சமூக செயல்பாடுகள் குறித்த பிரதிபலிப்புகள்" என்ற புத்தகத்தில் 20 பேர் தங்களின் படைப்புக்களை எழுதியுள்ளனர்.

அப்படிபட்டவர்களில் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தில் மிக நீண்ட காலம் பணியாற்றிவரும் என்.வி.சுப்பாராவ், திரு இத்ரிஸ் உடனான நட்பு, மலேசிய இந்தியர்களுக்கு அவர் ஆற்றிய பங்கு, போன்றவற்றை நினைவு கூர்ந்துள்ளார்.

சர்வதேச மேம்பாட்டு இஸ்லாமிய ஆய்வுகள் நிறுவனத்தில் நடைபெரும் இவ்விழாவில் அழைக்கப்பட்டவர்களே கலந்து கொள்ள முடியும்.

இந்தப்புத்தக வெளியீட்டு நிகழச்சி என்பதானது மறைந்த  இட்ரிஸின் அசாதாரண சாதனைகளுக்கு நினைவுகூர்வது  மட்டுமல்லாமல், இளைய தலைமுறை மலேசியர்களை அவரது குடிமைப் பொறுப்பு, நேர்மையின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல ஊக்குவிக்கும் அழைப்பாகும் அச் சங்கத்தின் தலைவர் முஹைதீன் அப்துல் காதர் கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset