நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கட்சியின் மத்திய செயலவை முடிவு செய்யும் வரை தேசிய முன்னணியுடன் மஇகா ஒத்துழைக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்

தாப்பா:

கட்சியின் மத்திய செயலவை முடிவு செய்யும் வரை தேசிய முன்னணியுடன் மஇகா ஒத்துழைக்கும்.

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

மஇகாவின் அரசியல் திசையைப் பற்றி விவாதிக்க கட்சியின் உயர்மட்டத் தலைமை விரைவில் கூடும்.

இதில் தேசியக் கூட்டணியுடன்  கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்த ஊகங்களும் அடங்கும்.

மஇசி மத்திய செயலவை ஒரு முடிவை எடுக்கும் வரை, நாங்கள் தேசிய முன்னணியுடன் ஒத்துழைப்போம்.

தாப்பாவில்  50 பொது, தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவிற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் எந்தவொரு கட்சியும் மீண்டும் சேர்க்கப்படாது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறியது குறித்து கருத்து தெரிவித்த டத்தோஸ்ரீ சரவணன், அந்த நிலைப்பாட்டுடன் தான் உடன்படுவதாக விளக்கினார்.

ஜாஹித் சொன்னது சரிதான். தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் எந்தக் கட்சியும் நிரந்தரமாக வெளியேறி, மீண்டும் வராது.

அவரது கூற்றுடன் நான் உடன்படுகிறேன் என்று அவர் கூறினார்.

மஇகாவின் எதிர்காலம் குறித்த எந்தவொரு முடிவும் கட்சியின் உயர்மட்டத் தலைமையால் கூட்டாக எடுக்கப்படும், தனித்தனியாக அல்ல என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset