நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத் துறையில் வேலை செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை சரிவை தடுக்க வேண்டும்: குலசேகரன்

ஈப்போ:

அரசாங்கத் துறையில் வேலை செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை  சரிவை தடுக்க  ஈப்போ பாராட் நாடாளுமன்ற தொகுதியின்  சேவை மையத்தின் ஏற்பாட்டில்   விழிப்புணர்வு நிகழ்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

அதன்  நாடாளுமன்ற உறுப்பினரும்  சட்டத் துறை துணை அமைச்சருமான எம் . குலசேகரன் இந்த நிகழ்வை தொடக்கி வைத்தார்

இதனை புத்ரா ஜெயா இந்திய அரசு பணியாளர்கள் சங்கம்( இமையம்) இயக்க ஆதரவுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தில் 10 விழுக்காடு இந்தியர்கள் பணிபுரிந்து வந்தனர். இன்று அதன் எண்ணிக்கை 3.6 விழுக்காடாக சரிவுக் கண்டுள்ளது.

காலபோக்கில் அரசு துறையில் இந்தியர்கள் தொடர்ந்து நிலை நிறுத்தபடுவார்களா என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஆக அரசு துறையில் பணியாற்ற கிடைக்கின்ற வாய்ப்புகளுக்கு எவ்வாறு விண்ணப்பங்கள் செய்வது, வேலைக்கு விண்ணப்பம் செய்தும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் நிறை குறைககள் குறித்து இளைஞர்களுக்கு இம்மையம் எடுத்துரைத்தது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட எம். குலசேகரன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இன்று அரசு துறையில் 3.6 விழுக்காடு இந்தியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள். அதன் எண்ணிக்கை அதிகரிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதற்கு இந்திய இளைஞர்களை ஊக்கப்படுத்த ஈப்போ ஐ. ஆர். சி. மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் எதிர்பார்த்து 300 இளைஞர்கள், ஆனால் இந்த நிகழ்வில் 1500 இளைஞர் வந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசு துறையில் இந்தியர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதை வரவேற்ற எம்.குலசேகரன் , அரசு துறையில் செய்யப்படும் விண்ணப்பங்கள் எவ்வாறு செய்யவேண்டும்.

நேர்முக பேட்டிக்கு  தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் எவ்வாறு தங்களை தயார் செய்யவேண்டும் ஆலோசனை வழங்கப் பட்டது என்றார்.

இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் ஆர்வம் உள்ள இளைஞர்கள் அரசு தேர்வு செய்யவேண்டும்.

விண்ணப்பங்கள் அதிகமாக இருந்தால் இந்திய இளைஞர்களுக்கு அரசு துறையில் கூடுதல் வாய்ப்புகள் கேட்டு  வலியுறுத்தப்படும் என்றார்.

இந்த நிகழ்வு குறித்து பேசிய நிகழ்வின்  ஒருங்கிணைப்பாளரும் இமையம் இயக்கத்தின் தலைவருமான டாக்டர் சதிஸ்குமார்,

பேரா மாநிலத்தில் நடத்தப்படுவது இது இரண்டாவது நிகழ்வாகும்.

இதற்கு முன்பு ஜெகூர் மாநிலத்தில் ஏற்பாடு செய்யபட்டு் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இன்று பேராவில் நடத்தப்பட்டது எதிர்பார்த்ததை விட அதிகமான இளைஞர்கள் கலந்துக்கொண்டு ஆதரவை வழங்கியுள்ளனர்.

அரசு துறையில் அதிகமான வாய்ப்புகள் உள்ளது அதற்கு எவ்வாறு விண்ணங்கள் செய்வது மற்றும் ஆலோசனை வழங்குவதே எங்களின் முக்கிய பங்கு என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset