நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்காட்டிகளை வழங்கிக்கொண்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பாதுகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் 

பத்துகாஜா: 

ஓர் அர்த்தமுள்ள காலை நேரத்தை நான் துரோனோ சந்தையிலும் அதைச் சுற்றியுள்ள கடைகளிலும் செலவிட்டேன். இந்த அனுபவம், அடித்தள மக்களுடன் நேரடியாக இணையும் அணுகுமுறையே எங்கள் அரசியல் பயணத்தின் உயிர்நாடி என்பதைக் மீண்டும் நினைவூட்டியது. நாட்காட்டிகளை வழங்குவது எளிய செயற்பாடாகத் தோன்றினாலும், களத்தில் அது மக்களுடன் உரையாட, அவர்களின் குரலைக் கேட்க, நம்பிக்கையை வலுப்படுத்தும் மதிப்புமிக்க தருணமாக மாறியது என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார்.

துரோனோ  சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஸ்டீவன் டிவ் மற்றும் பத்து காஜா அணியுடன் இணைந்து, ஒரு கடையிலிருந்து இன்னொரு கடை வரை, ஒரு வியாபார நிலையிலிருந்து மற்றொன்றிற்கு சென்று, அங்கு நீண்ட காலமாக வாழ்ந்து வரும் வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களை சந்தித்தோம். பலர் தங்களின் குறைகள் மற்றும் தினசரி சவால்களை பகிர்ந்துகொள்ள நேரம் ஒதுக்கினர். நான் கவனமாகக் கேட்டேன். ஏனெனில் உண்மையான தலைமை என்பது மக்களின் வாழ்க்கைச் சூழ்நிலைகளை ஆழமாகப் புரிந்துகொள்வதிலிருந்தே தொடங்குகிறது என நான் நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

மனதை நெகிழவைத்த தருணங்களில் ஒன்று, கட்சியுடன் பல போராட்டக் கட்டங்களை கடந்த விசுவாசமான ஜசெக மூத்த உறுப்பினர்களைச் சந்தித்ததுதான். சந்தையில் அவர்களுடன் எளிய காலை உணவைப் பகிர்ந்துகொண்ட அனுபவம், என்னை பணிவடையச் செய்ததோடு, புதிய ஊக்கத்தையும் அளித்தது. 

அவர்களின் கதைகள், தியாகம், உறுதி மற்றும் கட்சியின் போராட்டக் கோட்பாடுகளின் மீது கொண்ட உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினர். அவர்களது தொடர்ந்த ஆதரவு எங்களுக்கு வலிமையின் மூலமாக கிடைக்கப்பெறுவதற்கு அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மொத்தத்தில், களத்தில் கிடைத்த வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. வெளிப்பட்ட ஆதரவு, தொடர்ந்து வழங்கப்பட்ட சேவை மற்றும் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். 2008ஆம் ஆண்டில் ஜசெக துரோனோ  சட்டமன்றத் தொகுதியை வென்றதிலிருந்து, மக்களுக்கு சேவை செய்வதற்கும், அளிக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் நாம் இடைவிடாது உழைத்து வருகிறோம். இந்தப் பயணத்தின் போது கிடைத்த ஆதரவும் ஊக்கமும், அந்த நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியது என்று அவர் சொன்னார்.

இந்த களப்பணிப் பயணம், அரசியல் எப்போதும் மக்களுக்குச் சமீபமாக இருக்க வேண்டும் என்பதை எனக்கு மீண்டும் நினைவூட்டியது. குறிப்பாக,நேர்மையான உரையாடல்கள், ஒன்றாக அளாவளாவும் தருணங்கள், மற்றும் உண்மையான ஈடுபாடு என்பவற்றின் அடிப்படையாகும் என்று அவர் கருத்துரைத்தார்.

இது, பணிவு, பொறுப்புணர்வு மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் என்னுடைய உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று உறுதியளித்தார்.

ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset