நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதில் டத்தோஸ்ரீ அன்வார் நேர்மையானவராக இருந்தார்: ஜாஹித்

செமினி:

ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதில் பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார் நேர்மையானவராக இருந்தார்.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு தேசிய முன்னணியுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் பிரதமர் உறுதியுடன் பணியாற்றினார்.

நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்கள் தலைவர், அதிக இடங்களைப் பெற்றிருந்த போதிலும், பேரா  மந்திரி புசார் பதவியை தேசிய முன்னணிக்கு வழங்குவதில் தாராள மனப்பான்மை கொண்டிருந்தார்.

முன்னாள் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா ஒரு ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க உத்தரவிட்டார்.

அப்போது டத்தோஸ்ரீ அன்வார் காட்டிய நேர்மையின் காரணமாக நாங்கள் அவருடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டோம் என்று அவர்  கூறினார்.

அப்போதிருந்து டத்தோஸ்ரீ அன்வார் எப்போதும் அரசாங்க நிர்வாகத்தில் உள்ள பல்வேறு கூறு கட்சிகளின் கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தி வருகிறார்.

அவற்றில் கபுங்கன் பார்ட்டி சரவா (ஜிபிஎஸ்),  கபுங்கான் ரக்யாட் சபா (ஜிஆர்எஸ்) ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset