நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய இளைஞர்களிடையே கலாச்சாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் தொடர்ந்து முன்னெடுக்கும்: டத்தோ சிவக்குமார்

பத்துமலை:

இந்திய இளைஞர்களிடையே கலாச்சாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் தொடர்ந்து முன்னெடுக்கும்.

தேவஸ்தானத்தின் அறங்காவலரும் டிஎஸ்கே சமூக நல அமைப்பின் தலைவருமான டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

யூகேஎம் இந்திய மாணவர்கள் மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்த பல்கலைக்கழகத்தில் புதிதாக சேரும் மாணவர்களுக்கான சிறப்பு பூஜையில் நான் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த நிகழ்வில் தங்கள் உயர்கல்வி பயணத்தைத் தொடங்கிய இளைய மாணவர்களுக்கு மூத்த மாணவர்கள் அளிக்கும் முன்முயற்சிகள் அக்கறையை இது காட்டுகிறது.

மாணவர்கள் பிரார்த்தனைகளுடன் தொடங்கினர். அதைத் தொடர்ந்து பஜனை பாடல்கள் பாடினர்.

இந்த நிகழ்ச்சியில் கலாச்சார கூறுகளை உட்பொதிப்பதில் மாணவர்களின் முயற்சியை நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.
மேலும் இது அவர்களின் பல்கலைக்கழக அனுபவத்தையும் அடையாளத்தையும் வலுப்படுத்தும் அம்சமாகும்.

மேலும் இது போன்ற முயற்சிகளில் தொடர்ந்து பங்கேற்க வேண்டும்.

இந்நிலையில் நான் அவர்களிடம் பத்துமலை இந்திய கலாச்சார மையத்தை அறிமுகப்படுத்தினேன்,

குறிப்பாக இளைஞர்களிடையே இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் செயல்பாடுகளை இது எடுத்துக்காட்டுகிறது.

அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் கல்வி,  எதிர்கால முயற்சிகளில் சிறந்து விளங்க எனது வாழ்த்துகள் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset