நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாப்பாவில் மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும்: டத்தோஸ்ரீ சரவணன்

தாப்பா:

தாப்பாவில் மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

தாப்பாவில் இன்று 51 அரசு, தனியார் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்பட்டது.
பல்லின மாணவர்களுக்கு இம்மடிக் கணினிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றிய டத்தோஸ்ரீ சரவணன்,

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆண்டு முதல் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மாணவர்களின் கல்விக்கு நான் தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருகிறேன்.

கல்வியில் சாதிக்க வறுமை ஒரு காரணமாக இருக்கக் கூடாது என பல்வேறு திட்டங்களை நான் மேற்கொண்டு வருகிறேன்.

ஆரம்ப, இடைநிலை பள்ளி மாணவர்களை தவிர்த்து கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந்த உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தான் இன்று 51 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

இந்த மடிக்கணினிகள் மாணவர்கள் தங்கள் கல்வி மேற்கொள்ள பயனாக இருக்கும் என தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset