நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐபிஎப் கட்சி தேசிய முன்னணியில் இணையும் காலம் மிக விரைவில் உள்ளது: ஜாஹித்

செமினி:

ஐபிஎப் கட்சி தேசிய முன்னணியில் இணையும் காலம் மிக விரைவில் உள்ளது.

தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இதனை தெரிவித்தார்.

தேசிய முன்னணிக்கு ஐபிஎப் முழு விசுவாசமாக இருக்கிறது.

மேலும் தேசிய முன்னணியில் இணைய ஐபிஎப் கட்சி 35 ஆண்டுகளாக போராடி வருகிறது.

தேசிய முன்னணி நண்பராக இருக்கும் ஐபிஎப் கட்சியை ஒரு உறுப்பு கட்சியாக இணைந்து கொள்ளுங்கள் என்று இன்று நடைபெற்ற ஐபிஎப் கட்சியின் 33 ஆவது தேசிய பேராளர் மாநாட்டில் உரையாற்றிய போது டத்தோ லோகநாதன் கோரிக்கையை முன் வைத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, 35 ஆண்டுகள் காத்து இருந்தீர்கள்.

இன்னும் கொஞ்ச நாள் பொறுங்கள். தேசிய முன்னணியில் ஐபிஎப், கிம்மா, மக்கள் சக்தி போன்ற கட்சிகள் இணையும் காலம் விரைவில் உள்ளது என்று பலத்த கரவொலிக்கிடையே அவர் அறிவித்தார்.

இன்று காலையில் செமினி எக்கோ வோல்ட் மாநாட்டு மண்டபத்தில் ஐபிஎப் கட்சியின் தேசிய பேராளர் மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset