நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எந்தவொரு பலனையும் எதிர்பார்க்காமல் தேசிய முன்னணிக்கு ஐபிஎப் கட்சி விசுவாசமாக இருக்கிறது: மோகன்

செமினி:

ஏழை எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட ஐபிஎப் கட்சி எந்தவொரு பலனையும் எதிர்பார்க்காமல் தேசிய முன்னணிக்கு முழு விசுவாசமாக இருக்கிறது.

ஐபிஎப் கட்சியின் தலைமை செயலாளர் மோகன் முத்துசாமி தெரிவித்தார்.

ஐபிஎப் கட்சி தொடங்கப்பட்ட 33 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த 33 ஆண்டுகளாக ஐபிஎப் கட்சி தேசிய முன்னணிக்கு கடுமையாக உழைத்து வருகிறது.

நாங்கள் எந்தவொரு பலனையும் எதிர்பார்த்து வேலை செய்யவில்லை. ஐபிஎப் மக்களுக்காக உண்மையாக உழைக்கும் கட்சி.

நாங்கள் தொடர்ந்து தேசிய முன்னணிக்கு முழு விசுவாசமாக இருப்போம் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறோம்.

இன்று காலையில் செமினி எக்கோ வோல்ட் மாநாட்டு மண்டபத்தில் ஐபிஎப் கட்சியின் 33ஆவது பேராளர் மாநாட்டில் வரவேற்புரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset