நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ்  கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு 

திருவனந்தபுரம்: 

கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 

அதன்படி முதல் கட்டமாக கடந்த 9ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்றது. முதல் கட்டத்தில் 71 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 2வது கட்ட தேர்தல் திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு, வயநாடு, மலப்புரம், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது.

2-ஆம் கட்டவாக்குப்பதிவில் 75.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில், கேரள உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி 244 மையங்களில் நடக்கிறது. 

இதனையொட்டி வாக்குகள் எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 86 நகராட்சிகளில் 48 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

ஆளும் இடதுசாரி கூட்டணி 30 நகராட்சிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் 7-இல் முன்னிலை; இடதுசாரி கூட்டணி 5-ல் முன்னிலையில் உள்ளது. 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் 3, இடதுசாரிகள் 2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. 

152 ஊராட்சி ஒன்றியங்களில் காங்கிரஸ் கூட்டணி 69 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 64 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 

கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணி 2 நகராட்சி, ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. கேரள உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணி மாநகராட்சி, மாவட்ட பஞ்சாயத்துகளில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset