நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்தியா முழுவதும் ஒரு கோடி பேல் பருத்தி தரம் குறைவு: புதிய நெருக்கடியால் இந்திய ஜவுளித் தொழிலில் பாதிப்பு

கோவை: 

இந்தியாவில் ஆண்டுதோறும் 3.5 கோடி பேல் (ஒரு பேல் 170 கிலோ) பருத்தி உற்​பத்தி செய்​யப்​பட்டு வரும் நிலை​யில், அவற்​றில் 1 கோடி பேல் தரம் மிக​வும் குறைந்​துள்​ளது என்று தெரி​வித்​துள்ள ஜவுளித் தொழில் துறை​யினர், மத்​திய அரசு பருத்தி இறக்​குமதி வரி விலக்கை மார்ச் 31-ம் தேதி வரை நீட்​டித்து உதவ வேண்​டும் என்று கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

இதுகுறித்து ‘ஆர்​டிஎப்’ அமைப்பு தலை​வர் ஜெய​பால், ‘சை​மா’ தலை​வர் துரை.பழனி​சாமி, முன்​னாள் தலை​வர்​கள் சுந்​தர​ராமன், ரவி​சாம், ‘சிட்​டி’ முன்​னாள் தலை​வர் ராஜ்கு​மார் ஆகியோர் கூறிய​தாவது: 

இந்​திய ஜவுளித் தொழில் தற்​போது புதிய பிரச்​சினையை எதிர்​கொண்​டுள்​ளது.

இந்​தி​யா​வில் ஆண்​டு​தோறும் 350 லட்​சம் பேல் பருத்தி உற்​பத்தி செய்​யப்​படு​கிறது. இவற்​றில் தரம் குறை​வான பருத்தி தற்​போது மிக​வும் அதி​கம் காணப்​படு​கிறது. ஒரு கோடி பேல் பருத்தி வரை தரம் குறைந்து காணப்​படு​கிறது. இதனால் ஜவுளிப் பொருட்​கள் உற்​பத்தி கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

வெளி​நாடு​களில் இருந்து பருத்தி இறக்​குமதி செய்​வதற்கு முன்பு 11 சதவீத வரி விதிக்​கப்​பட்​டது. பருத்தி விலை உயர்​வால் போட்​டித் திறன் பாதிக்​கப்​படு​வ​தாக​வும், இறக்​குமதி வரியை நீக்கி உதவ வேண்​டும் எனவும் பல்​வேறு ஜவுளித் தொழில் அமைப்​பு​கள் சார்​பில் கோரிக்கை விடுக்​கப்​பட்​டது.

இதை ஏற்​று, மத்​திய அரசு பருத்தி இறக்​கும​திக்கு வரி விலக்கு அளித்​தது. இந்த வரி விலக்கை மத்​திய அரசு தற்​போது டிசம்​பர் 31-ம் தேதி வரை நீட்​டித்து உத்​தர​விட்​டுள்​ளது.

உள்​நாட்​டில் பருத்​தி​யின் தரம் குறைந்​துள்​ள​தால், இறக்​கும​திக்​கான வரி விலக்கை மார்ச் 31-ம் தேதி வரை நீட்​டித்து மத்​திய அரசு உதவ வேண்​டும்.

பருத்​திக்​கான குறைந்​த​பட்ச ஆதார விலையை (எம்​எஸ்​பி) மத்​திய அரசு உயர்த்​தி​யுள்​ளது. இதனால் இறக்​குமதி வரி விலக்கை நீட்​டிப்​ப​தால் விவ​சா​யிகளுக்கு எந்​தப் பாதிப்​பும் ஏற்​ப​டாது.

மேலும், ஏற்​றும​திக்​கான பணி ஆணை​களை பெறும்​போது வெளி​நாட்டு நிறு​வனங்​கள் பருத்​தி​யின் தரம் (திடத்​தன்​மை) குறித்து மிக​வும் கண்​டிப்​புடன் நடந்து கொள்​கின்​றனர். இதனால் தரமான பருத்​தியை மட்​டுமே பயன்​படுத்த வேண்​டிய நிலை ஏற்​பட்​டுள்​ளது.

பருத்​தி​யின் தரம் குறைந்து காணப்​படு​வ​தால், நூல் உற்​பத்​தி​யில் விஸ்​கோஸ் போன்ற செயற்கை இழை கலக்க வேண்​டிய நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வில் பருத்​தி​யின் தரத்தை அதி​கரிக்க விவ​சா​யிகளுக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்​தி, சிறப்பு மானி​யத் திட்​டங்​களை மத்​திய அரசு அமல்​படுத்த வேண்​டும். பருத்தி இறக்​கும​திக்​கான வரி விலக்கை நீட்​டிப்பு செய்து நடவடிக்கை எடுக்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​தனர்​.

ஆதாரம்: தி ஹிண்டு

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset