நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துகாஜா சேவை மையத்தினர் திருத்த மையத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்: வ.சிவகுமார்

பத்துகாஜா: 

பத்து காஜா நாடாளுமன்ற மக்கள் சேவை மையக் குழுவினர் பத்து காஜா திருத்த மையத்திற்கு ஒரு பணிச்சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். எங்களை அந்த மையத்தின் இயக்குநரும் மூத்த அதிகாரிகளும் அன்புடன் வரவேற்றனர் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார்.

இங்கு வழங்கிய விளக்கவுரை அமர்வில், திருத்த மைய இயக்குநர் அன்றாட செயல்பாடுகள், வசிப்போர் மேலாண்மை மற்றும் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திருத்த மற்றும் மீளுருவாக்கப் பணிகள் குறித்து விளக்கமளித்தார்.

காலை உணவை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது; இது மக்கள் சேவை மையத்திற்கும் மைய நிர்வாகத்திற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியது என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் நலனை மேம்படுத்தும் முயற்சிக்கு ஆதரவாக, திருத்த மைய சமையலறைக்காக உணவு பதப்படுத்தும் இயந்திரம் வாங்குவதற்கு  நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 5 ஆயிரம் ரிங்கிட் காசோலை ஒன்றை வழங்கியதாக அவர் சொன்னார்.

 பொதுமக்களின் மீளுருவாக்கம் மற்றும் நலத்திட்டங்களை வலுப்படுத்த சில முக்கியமான பரிந்துரைகளையும் பத்து காஜா திருத்த மையம் முன்வைத்தது. அவற்றை நன்கு பரிசீலித்து, சம்பந்தப்பட்டவர்களுடன் கந்தாலோசித்து நீண்டகால நன்மைகள் கிடைக்கும்படி செயல்படுத்துவதை உறுதி செய்வதாக அவர் உறுதியளித்தார்

இந்த சுற்றுப்பயணம் நமது நட்புறவை வலுப்படுத்தியதிலும், அர்த்தமுள்ளதாக அமைந்த இந்த சந்திப்பின் மூலம் மேலும் நெருங்கிய ஒத்துழைப்பை உருவாக்கியதிலும் எனக்கு மகிழ்ச்சி அடைவதாக அவர் பதிவிட்டார்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset