நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

530 தமிழ்ப்பள்ளிகளுக்கு 5,000 நித்திரைக் கதைகள் புத்தகங்களை கொண்டு சேர்ப்பதே மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சங்கப் பேரவையின் இலக்கு: குமரன்

கோலாலம்பூர்:

நாட்டில் உள்ள 530 தமிழ்ப்பள்ளிகளுக்கு 5,000 நித்திரைக் கதைகள் புத்தகத்தை கொண்டு சேர்ப்பதே மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சங்கப் பேரவையின் முதன்மை இலக்காகும்.

மலேசிய தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் துணைத் தலைவர் குமரன் கூறினார்.

மலேசிய தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையினர் இந்த வாசிப்பை நேசிப்போம் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அதன் அடிப்படையில் தான்  நித்திரைக் கதைகள் எனும் புத்தகத்தை அறிமுகம் செய்யப்பட்டது.

ஆசிரியர்கள் முனைவர் கஸ்தூரி, நிரோசா ஆகியோர் 61கதைகள் கொண்டு இப்புத்தகத்தை எழுதியுள்ளனர்.

சிறப்பான முறையில் தயாராகி உள்ள இப் புத்தகம் அனைவரையும் சென்றடைய வேண்டும்.
மேலும் மக்களிடையே குறைந்து வரும் வாசிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்க இதுபோன்ற முயற்சிகள் மகத்தானது.

அதே வேளையில் இத்திட்டம் நாடு முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டு.

குறிப்பாக நாட்டில் உள்ள 530 தமிழ்ப்பள்ளிகளுக்கு 5,000 நித்திரைக் கதைகள் புத்தகத்தை கொண்டு சேர்க்க வேண்டும்.

இதன் மூலம்  மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சங்கப் பேரவைக்கு நிதி திரட்டுவதும் முதன்மை நோக்கமாக உள்ளது.

இந்நிதியை கொண்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிறைய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

இதன் இலக்காக கொண்டே பேரவை செயல்படுகிறது என்று குமரன் கூறினார்.

இதனிடையே தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் அதிகமானோர் வெளியே இருப்பார்கள்.

இவர்கள் முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் இணைந்திருப்பார்கள். அப்படி இணையாதவர்கள் அச்சங்கங்களில் இணையலாம்.

அச்சங்கங்களின் வாயிலாக இப்புத்தகங்களை வாங்கி பள்ளிகளுக்கு தரலாம்.

அல்லது முன்னாள் மாணவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு புத்தகங்களை வாங்கி ஆதரவு தரலாம்.

எது எப்படி இருந்தாலும் இத்திட்டம் தமிழ்ப்பள்ளிக்கும் மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் கூறினார்.

இது தொடர்பான மேல்விவரங்களுக்கு கேசவன் 012-3113343, பார்த்திபன் 017-6834685 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset