செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளி, மாணவர்களின் நலனில் மடானி அரசு அக்கறை செலுத்துகிறது; பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
தமிழ்ப்பள்ளி, மாணவர்களின் நலனில் மடானி அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது.
ஆக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொழில் நுட்பத் துறையில் பின்னடைவை சந்திக்கக் கூடாது என்ற அடிப்படையில் புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் மித்ராவின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்கு திறன் பலகை எனும் ஸ்மார்ட் போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் முதல் கட்டமாக 104 தமிழ்ப்பள்ளிகளுக்கு இன்று திறன் பலகை வழங்கப்பட்டது.
சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த திறன் பலகை நிச்சயம் தமிழ்ப்பள்ளிகளுக்கு பெரும் பயனாக இருக்கும் என நம்புகிறேன்.
இதை தவிர்த்து தமிழ்ப்பள்ளி, அங்கு படிக்கும் மாணவர்களின் நலனில் மடானி அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது.
தமிழ்ப்பள்ளிகளின் சீரமைப்பு, மாணவர்களின் கல்வி உட்பட பல திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.
இருந்தாலும் மடானி அரசு தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்திய சமுதாயத்திற்கும் ஒன்றுமே செய்யவில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக மித்ரா என்றாலே அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதை ஒரு சிலர் பிழைப்பாகவே நடத்தி வருகின்றனர்.
அவர்களின் இந்நடவடிக்கைகளுக்கு அரசியல் சுயநலமே முக்கிய காரணமாகும்.
ஆகவே இதுபோன்றவர்கள் உடனடியாக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இதுவே எனது வேண்டுகோளாகும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 11:47 pm
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டி
July 14, 2026, 5:13 pm
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத் திருத்தம்: மலாக்கா அரசிலிருந்து ஜசெக விலகியது
July 14, 2026, 3:48 pm
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து DAP கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது
July 14, 2026, 1:13 pm
சிலாங்கூர் மாநிலத்தில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா: பாப்பா ராய்டு வழங்கினார்
July 14, 2026, 11:42 am
