நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி அரசாங்கத்தின் கீழ் ஒரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது: ஃபட்லினா சிடேக் உறுதி

கோலாலம்பூர்:

நாட்டில் மடானி அரசாங்கத்தின் கீழ் ஒரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் உறுதியாக கூறினார்.

இந்த அரசாங்கத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளிகள் மூடப்படவுள்ளன என தொடர்ந்து அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தும் வெறும் அவதூறுகள்தான். இதில் எந்த உண்மையும் இல்லை. இது வெற்றுப் பரப்புரை.

காரணம் தாய்மொழிப் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளையும் மடானி அரசு தற்காக்கும்.

குறிப்பாக மடானி அரசாங்கத்தின்கீழ் எந்தவொரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது.

இதனை ஓர் உத்தரவாதமாகவே நான் இங்கு அறிவிக்கிறேன். இதுதான் அரசாங்கத்தின் வாக்குறுதி ஆகும்.

ஆகவே அரசாங்கத்தின் மீது வீணாக பழி சுமத்த வேண்டாம்.

மித்ராவின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்கு திறன் பலகை வழங்கும் நிகழ்வில் பேசிய கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.

குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட தமிழ்ப்பள்ளிகளில் வகுப்புகள் ஒன்றாக சேர்த்து நடத்தப்படும்.

இது தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும் என அர்த்தமாகி விடாது.

அதேவேளையில் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியை, குவாந்தான் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி உட்பட பல புதிய தமிழ்ப்பள்ளிகளும் கட்டப்பட உள்ளன.

மேலும் பல தமிழ்ப்பள்ளிகளில் சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் தமிழ்ப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலக்கக உள்ளது.

இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என கல்வியமைச்சர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset