நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

Perplexity என்ற AI நிறுவனத்தில் முதலீட்டாளராக ரொனால்டோ இணைந்துள்ளார்

ரியாத்:

Perplexity என்ற AI நிறுவனத்தில் முதலீட்டாளராக இணைந்துள்ளார் கால்பந்து வீரர் ரொனால்டோ. 

சென்னையில் பிறந்த அரவிந்த் சீனிவாசன், பொது ஏஐ, கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

இவர் 2022 டிசம்பர் மாதம் Perplexity AI நிறுவனத்தைத் தொடங்கினார். இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் அவரது சொத்து மதிப்பு பல கோடியை கடந்தது.

இந்நிலையில், Perplexity நிறுவனத்தில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ முதலீட்டாளராக இணைந்துள்ளார்.

இந்த கூட்டணி குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அரவிந்த் சீனிவாசன், ரொனால்டோவுடன் கைகோர்ப்பதும், அவரை தங்கள் நிறுவனத்தின் முதலீட்டாளராக வரவேற்பதும் தனக்குக் கிடைத்த பெருமை எனக் கூறியுள்ளார்.

தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அவரது வேட்கையும், புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதில் அவர் காட்டும் ஆர்வமுமே அவரை GOAT என்று அழைக்க வைப்பதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset