நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்

கோவா:

கோவாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீச் சம்பவத்திற்கு மின்சாரப் பட்டாசு காரணம் என்று முதலமைச்சர் பிரமோத் சாவந்த் (Pramod Sawant) தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அந்த விவரங்கள் வெளிவந்தன.

குறைந்தது 25 பேர் தீச் சம்பவத்தில் உயிரிழந்தனர்.

காயமடைந்த 6 பேர் சீரான நிலையில் உள்ளனர்.

மாண்டோரில் ஐவர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள், 20 பேர் இரவு விடுதியில் வேலை செய்த ஊழியர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த ஊழியர்களில் பலர் இரவு விடுதியின் சமையல் அறையில் பணிபுரிந்தவர்கள் என்று சாவந்த் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு இரவு விடுதியின் செயல்பாடுகளைத் தொடங்க அனுமதி அளித்த 3 மூத்த மாநில அதிகாரிகள் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

இரவு விடுதியின் பொது மேலாளர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

அதன் உரிமையாளருக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இண்டியா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset