நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆஸ்திரேலியாவில் 70 இடங்களில் காட்டுத்தீ: 350,000 பேர் பாதிப்பு

மெல்பெர்ன்:

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தின் சில பகுதிகளில் இயற்கைப் பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு 70க்கும் மேற்பட்ட காட்டுத் தீச் சம்பவங்களை எதிர்த்து தீயணைப்பு வீரர்கள் போராடுகின்றனர்.

எதிர்வரும் கோடைக்காலத்தில் நிலைமை இன்னும் சிக்கலாகலாம் என்று பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி (Anthony Albanese) எச்சரித்துள்ளார்.

சிட்னி நகருக்கு வடக்கே சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் 350,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வசிக்கும் பகுதி காட்டுத் தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நல்லவேளையாக இதுவரை உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று ஆல்பனீசி குறிப்பிட்டார்.

இயற்கைப் பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டதால் குடியிருப்பாளர்கள், வர்த்தகங்கள், விவசாயிகள் ஆகிய தரப்புகளுக்கு ஆதரவு வழங்க அது உதவியாக அமையும்.

இதுவரை 12 வீடுகள் முற்றிலும் அழிந்துவிட்டன.

ஆயிரக்கணக்கான ஹெக்டர் விளைநிலம் தீக்கு இரையானது.

அதிகரிக்கும் வெப்பநிலையால் காட்டுத்தீ மோசமாகக்கூடும் என அஞ்சப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset