நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வெளிநாட்டு ஊழியர்கள் கலைஞர் வேலை விசா அனுமதியின்கீழ் இனி சிங்கப்பூருக்குள் நுழைய முடியாது: அரசு அறிவிப்பு

சிங்கப்பூர்:

வெளிநாட்டு ஊழியர்கள் அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் கலைஞர் - ஆர்டிஸ்ட் வேலை விசாவுக்கு அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது.

மனிதவள அமைச்சும் காவல்துறையும் அண்மையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அந்தத் திட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

2008இல் திட்டம் அறிமுகம் கண்டது.

மதுக்கூடங்கள், ஹோட்டல்கள், இரவு விடுதிகள், பார்கள் ஆகியவற்றில் படைப்புகளை அரங்கேற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கு அத்திட்டத்தில் அனுமதி கொடுக்கப்பட்டது.

ஆனால் கலைஞர்களை வேலைக்கு எடுத்த நிறுவனங்கள் பிற நிறுவனங்களில் அல்லது இடங்களில் அவர்களை வேலை செய்ய அனுமதித்தது தெரியவந்தது.

தற்போது அத்திட்டத்தின்கீழ் வேலை அனுமதி வைத்திருப்போர் அது காலாவதியாகும் வரை அல்லது ரத்தாகும் வரை அதைப் பயன்படுத்தலாம் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset