நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்

புதுடெல்லி:

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) நாளை மறுநாள் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்.

ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி, எரிசக்தி, தற்காப்புத் திறன் மேம்பாடு குறித்து அவர் இந்தியத் தலைவர்களுடன் பேசுவார்.

இந்தியாவுக்கு ஏவுகணைகளையும், போர் விமானங்களையும் விற்பது குறித்தும் அதிபர் புட்டின் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்த பின் இந்தியா தொடர்ந்து அதன் சொந்த நலன்களை விட்டுக்கொடுக்காமல், ரஷ்யாவுடன் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது.

ஆனால் ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவளித்து வருவதாக அமெரிக்கா நெருக்கடி கொடுத்துவருகிறது.

ரஷ்யா மீதான தடைகள் கடுமையாக்கப்பட்டதால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மூவாண்டுகளில் இல்லாத அளவில் ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.

ரஷ்ய அதிபர் புட்டின் நாலாண்டில் முதன்முறையாக இந்தியா செல்கிறார்.

அவருடன் தற்காப்பு அமைச்சரும் வர்த்தக, தொழில்துறைப் பேராளர்களும் செல்வர். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset