செய்திகள் உலகம்
சமூகச் சேவைக்காக ராயல் கிங்ஸ் குழுமத்தின் கேரி ஹாரிசுக்கு இந்தியத் தூதரக உயர் விருது
சிங்கப்பூர்:
சமூகத்திற்கு பல்வேறு வகைகளில் உதவிக்கரம் நீட்டியதற்கும் சமூக சேவைக்குப் பங்களித்ததற்கும் ராயல் கிங்ஸ் குழுமத்தைச் சேர்ந்த கேரி ஹாரிஸ் சிறப்பிக்கப்பட்டார்.
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி நிகழ்ச்சியில் சமூக சேவைக்கான உன்னத விருது அவருக்கு வழங்கப்பட்டது.
ராயல் கிங்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ஹாரிஸ், ராயல் கிங்ஸ் குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களுடன் இணைந்து வெளிநாட்டு ஊழியர்களின் ஆர்வலராகவும் வழிகாட்டியாகவும் இருந்துவந்துள்ளார். அவர் ராயல் கிங்ஸ் குழுமத்தில் மூத்த வணிக மேம்பாட்டு மேலாளராக இருக்கிறார்.
அனுபவமிக்க சமுதாயத் தலைவருமான அவர் பலமுறை, அவசரகாலங்களில் விரைவாகச் செயல்பட்டு சமுதாயத்திற்கு 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பங்களித்து வருகிறார்.
அக்டோபர் 5ஆம் தேதி செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி சிங்கப்பூர், இந்தியாவிற்கு இடையேயான 60 ஆண்டுகால அரசதந்திர நட்புறவின் கொண்டாட்டத்தையும் குறித்தது. அது இரு நாடுகளுக்கு இடையேயான நீடித்த பிணைப்பையும் பிரதிபலித்தது.
ராயல் கிங்ஸ் குழுமத்தின் தலைமையில் 70க்கும் மேற்பட்ட கலைஞர்கள், 120 தொண்டூழியர்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியில் வண்ணமயமான பண்டிகைக்கால உணர்வு தென்பட்டது.
இந்தியாவும் சிங்கப்பூரும் 60 ஆண்டுகளாக வலுவான பல்வகைப்பட்ட கூட்டாண்மையை வளர்த்து வந்துள்ளன.
வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பத்தில் உள்ள வலுவான ஒத்துழைப்பு முதல் ஆழமான கலாசார, கல்வி, பரிமாற்றங்கள் வரை இந்திய-சிங்கப்பூர் உறவானது மக்களிடையேயான தொடர்புக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது.
‘ராயல் கிங்ஸ்’ குழுமம் கடந்த பத்தாண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்திய வர்த்தகர்கள், சிங்கப்பூரில் புதிதாகத் தங்கள் தொழில்களை நிறுவுவதற்கு ராயல் கிங்ஸ் குழுமம் உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 30, 2025, 8:34 pm
சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை
November 29, 2025, 11:18 pm
இலங்கையைக் கடுமையாகத் தாக்கிய டிட்வா புயல்: அவசர நிலையை அறிவித்த பிரதமர்
November 28, 2025, 8:42 pm
2026 ஆண்டு சிங்கப்பூரிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல 900 யாத்ரீகர்களுக்கு அனுமதிக் கடிதம்
November 28, 2025, 7:46 pm
ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது
November 27, 2025, 10:51 pm
இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது
November 27, 2025, 11:09 am
ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்
November 27, 2025, 7:15 am
இந்தோனேசியாவில் நிலச்சரிவு, கடும் வெள்ளம்: 16 பேர் பலி
November 26, 2025, 7:24 am
1MDB மோசடி: Standard Chartered வங்கிக்கு எதிராக $3.52 பில்லியன் வழக்கு
November 25, 2025, 3:12 pm
