நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் பாண்டானில் இந்திய ஆடவரை அடித்துக் கொன்றதற்காக இரண்டு மியன்மார் நாட்டவர்கள் கைது: போலிஸ்

கோலாலம்பூர்:

கம்போங் பாண்டானில் இந்திய ஆடவரை அடித்துக் கொன்றதற்காக இரண்டு மியன்மார் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாங்சா மாஜு மாவட்ட போலிஸ் தலைவர் முகமது லசிம் இஸ்மாயில் இதனை கூறினார்.

நேற்று இங்குள்ள கம்போங் பாண்டன், லோரோங் 5 இல் நடந்த ஒரு சம்பவத்தில் உள்ளூர்வாசி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு மியான்மர் நாட்டவர்கள் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலிசாருக்கு நள்ளிரவு 12.01 மணிக்கு அறிக்கை கிடைத்தது.

22 வயதுடைய பாதிக்கப்பட்டவர் தலையில் ரத்த காயத்துடனும், இடது உள்ளங்கையில் காயத்துடனும் சாலையில் மயக்கமடைந்து கிடந்தது கண்டறியப்பட்டது.

பின்னர் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதிகாலை 2.33 மணிக்கு இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset