நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாம் ஒற்றுமையாக இருந்து வரலாற்று பாடமாக மிளிர வேண்டும்; மகாகவி கண்ணதாசனின் நூற்றாண்டு விழா லுமூட்டில் அடுத்தாண்டு நடைபெறும்: டத்தோஸ்ரீ எம்.சரவணன்.

மஞ்சோங்1:

லுமூட் ம இ கா தொகுதியின் "அறம் சேர் அமுதுடன் ஒளிப்பெரு விழா" வான தீபாவளி நல்லெண்ண விருந்து சிறப்பாக ஏற்பாடு செய்த தொகுதித்தலைவர் கே.பரந்தாமன், அவர் தம் நிர்வாகத்திற்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொண்டார் இந்நிகழ்வின்  முதன்மை பிரமுகரான ம இ கா வின் தேசியத் துணைத்தலைவரும், தாப்பா நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன்.

இன்று இங்கு வருகையளித்த மக்களின் கூட்டத்தை காணும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவை எதனை குறிக்கிறது என்றால் நம் இந்திய சமூக இதுபோல் ஒற்றுமையாக இருந்தால் எந்த கொம்பனும் நம்மை அசைக்க முடியாது. இந்த ஒற்றுமை வழிமுறை நாடு முழுவதும் இந்தியர்களுடையே தொடரவேண்டும். இத்தகைய ஒற்றுமை பண்பால் வரலாற்று பாடமாக நாம் மிளிர முடியும் என்று அவர் உறுதியுடன் கூறினார்.

நடந்து முடிந்த சபா மாநில தேர்தல் நமக்கு ஒரு படிப்பினையாக அமைந்துள்ளது. குறிப்பாக, அம்மாநிலத்தில் அந்நிய கட்சிகளுக்கு இடமில்லை. இது எங்கள் மாநிலம் இதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் வெளியேறுங்கள் என்று அங்குள்ள மக்களின் தேர்தல் முடிகள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

நமது சமூகத்தின் நிலைப்பாட்டை நாம்தான் நிர்ணயம் செய்ய வேண்டும். நாம் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அமைச்சராக அல்லது துணையமைச்சராக இருந்தாலும் நம் இந்திய சமூகத்தின் மேம்பாடு மற்றும் ஒற்றுமைக்கு முன்னுரிமையும், முக்கியதுவம் வழங்க வேண்டும் என்ற புரிதலுடன் செயல்பட்டால் நம் சமூகத்திற்கு வெற்றியே என்று அவர் கருத்துரைத்தார்.

இங்குள்ள நிலைப்பாடு மற்றும் மக்களின் வரவேற்பை காணும் பொழுது, அடுத்தாண்டில் மகாகவி் கண்ணதாசனின் நூற்றாண்டு விழா லுமூட் மஞ்சோங்கில் நடைபெறும். அதற்கான, ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக டத்தோஸ்ரீ எம்.சரவணன் மகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் லுமூட் தொகுதியின் முன்னாள் ம இ கா கிளைத்தலைவர்கள் சிறப்பு செய்யப்பட்டனர். அதோடு, மறைந்த கிளைத்தலைவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவியும் வழங்கப்பட்டது. இந்து தர்ம மாமன்றத்திற்கும் நிதியுதவி வழங்கி உதவினார் டத்தோஸ்ரீ எம்.சரவணன்.

இறுதியில், அரசியல்வாதியான இலக்கியவாதி; இலக்கியவாதியான அரசியல்வாதி என்று டத்தோஸ்ரீ எம்.சரவணனின் தனித்திறமையை பாராட்டினார் தொகுதித்தலைவர் கே. பரந்தாமன்.

ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset