நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிற்சாலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது; ஒருவர் உயிரிழந்தார்: 7 பேர் படுகாயம்

ஜார்ஜ்டவுன்:

தொழிற்சாலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை மவுண்ட் எர்ஸ்கைன் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில்  ஒரு பெண் இறந்தார். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

கடுமையாக காயமடைந்த ஆறு பேரும் 21 முதல் 52 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆவர்.

வேனின் ஆண் ஓட்டுநரான ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தீயணைப்பு, மீட்புப் பிரிவு உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறுகையில்,

விபத்து நடந்த இடத்திற்கு வருவதற்கு முன்பு காலை 5.59 மணிக்கு தனது குழுவினருக்கு அவசர அழைப்பு வந்தது

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், தொழிற்சாலை வேனில் இருந்த எட்டு பேரில் நான்கு பேர் வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கியிருப்பதைக் கண்டனர்.

லெபோ பந்தாய் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் உதவியுடன் பாகன் ஜெர்மல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, சிக்கியவர்களை மீட்டனர்.

பின்னர் காலை 7.17 மணிக்கு அனைவரும் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனைக்காக அவரின் உடல்  பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

மேலும் ஏழு பேர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset