நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தானில் கணவரால் மனைவி கத்தியால் குத்திக் கொலை

தானா ராத்தா:

கணவரால் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு பெண் மரணமடைந்தார்.

கிளந்தான் தானா மேராவில் உள்ள குவால் ஈப்போவில் உள்ள அவர்களது வீட்டில் இந்த சம்பவம் நடந்தது.

காலை 10 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், 40 வயதான பாதிக்கப்பட்ட பெண் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்டவரின் 63 வயது கணவர் இன்று மதியம் 1 மணியளவில் குவால் ஈப்போ போலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

மரணமடைந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக தானா மேரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இதற்கிடையில், தானா மேரா போலிஸ் தலைவர் முகமட் ஹக்கி ஹஸ்புல்லா இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

மேலும் சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset