நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவில் வெற்றி பெற்றது பாஸ் கட்சியின் புதிய தொடக்கமாகும்: ஹாடி

கோலாலம்பூர்:

சபா மாநிலத்தில் வெற்றி பெற்றது பாஸ் கட்சியின் புதிய தொடக்கமாகும்.

அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ  ஹாடி அவாங் இதனை கூறினார்.

இந்த முறை சபா மாநிலத் தேர்தலில் பாஸ் பெற்ற சாதனைகள், கட்சிக்கு ஒரு புதிய அளவுகோலாகும்.

குறிப்பாக அதன் டக்வா, சியாசா, தர்பியா, நலன்புரி முயற்சிகளை வலுப்படுத்துகிறது.
தேர்தல் காலம் முழுவதும், குறிப்பாக கரம்புனை மாநிலத் தொகுதியில் அவர்கள் பெற்ற வெற்றிக்காக, முழு சபா பாஸ் தேர்தல் கேந்திரத்தின் அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு, பணியின் தரத்திற்காக ஹாடி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்த தியாகமும், ஒற்றுமையான சக்தியும்தான் எங்கள் போராட்டத்திற்கு வலிமை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset