நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் பள்ளி நேரங்களில் கைத்தொலைப்பேசிகளைப் பயன்படுத்த மாணவர்களுக்குத் தடை

சிங்கப்பூர்:

உயர்நிலைப் பள்ளி நேரங்களில் கைத்தொலைபேசிகள், பலபயன் கைக்கடிகாரங்கள் போன்ற அறிவார்ந்த சாதனங்களை அடுத்த ஆண்டுமுதல் பயன்படுத்த முடியாது.

இடைவேளை நேரம், இணைப்பாட வகுப்புகள் உட்பட்ட நேரங்களிலும் அவற்றைப் பயன்படுத்த அனுமதி இல்லை.

உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே ஆரோக்கியமான மின்னிலக்கப் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கக் கல்வி அமைச்சு அந்த மாற்றத்தைக் கொண்டுவருகிறது.

பள்ளிகளில் மாணவர்களின் திரைநேரத்தை நிர்வகிக்கப் புதிய வழிகாட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பள்ளி நேரங்களில் மாணவர்கள் அவர்களுடைய கைத்தொலைபேசிகள், பலபயன் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றைப் பள்ளிப்பையிலோ அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட இடத்திலோ வைத்துக்கொள்ளலாம்.

தேவைப்பட்டால் மட்டும் அறிவார்ந்த சாதனங்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

மாணவர்கள் பாடங்களுக்குப் பயன்படுத்தும் தனிப்பட்ட மின்னிலக்கச் சாதனங்கள் தினமும் இரவு 10.30 மணிக்கு அணைந்துவிடும். முன்னர் அது 11 மணிக்கு அணைந்துகொண்டிருந்தது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset